சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :3732 days ago
வால்பாறை: வால்பாறை சீரடி சாய்பாபா கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை துவாரகாமாயி அறக்கட்டளை சார்பில், நகரின் மத்தியப் பகுதியில் சீரடி சாய்பாபா கோவில் அமைக்கப்பட்டு, நாள் தோறும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பஜன் பாடல்களும், அலங்கார பூஜையும், 6:30 மணிக்கு பஜன் பாடல்களும் நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.