உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி கோவில்களில் சிறப்பு வழிபாடு!

கள்ளக்குறிச்சி கோவில்களில் சிறப்பு வழிபாடு!

கள்ளக்குறிச்சி: ஆடி வெள்ளியையொட்டி கள்ளக்குறிச்சி பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு  நடந்தது. ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமைø  யயொட்டி, கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று  அதிகாலை பஞ்ச மூர்த்தி தெய்  வங்களுக்கு அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து துர்க்கையம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்தனர். அலங்காரத்திற்கு பின்   உலக நலன் வேண்டி துர்க்கையம்மனுக்கு பூஜைகள் செய்து வைக்கப்பட்டது. பெண்கள் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றிவழிபட்டனர். இதேபோல்   கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள், சிதம்பரேஸ்வரர், முத்துமாரியம்மன், திரவுபதி அம்மன், பத்ரகாளியம்மன், கங்கையம்மன்,   வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கமலா நேரு தெரு காமாட்சி அம்மன், அண்ணா நகர் துர்க்கையம்மன், அரசமரத்தடி களரி முனியப்பர் கோவில், ÷  சாமண்டார்குடி சோமநாதீஸ்வர் ஆகிய கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !