உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா!

தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா!

விருத்தாசலம்: ஆடி திருவிழாவையொட்டி, புதுக்குப்பம் தேவி கருமாரியம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம், புதுக்குப்பம் தேவி  கரு மாரியம்மன் கோவிலில் 13ம் ஆண்டு ஆடி திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனை, இரவு வீதியுலா நடந்தது. நேற்று முக்கிய நிகழ்வாக கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. மீனாட்சி அலங்காரத்தில் மாரியம்மன் அரு ள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !