சாத்தனூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா!
தியாகதுருகம்: சாத்தனூர் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. தியாகதுருகம் அடுத்த சாத்தனூர் மகா மாரியம்மன் கோவில் தேர் தி ருவிழா கடந்த 18ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு சக்தி கரகம் திருவீதியுலாவும் நடந்தது. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திர பாரத பாடல் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாண வைபவமும், பால்குடம் எடுத்து அபிஷேக, அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று மதியம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் சக்தி கரகம் அழைத்து தீமிதித்தல், அதைத்தொடர்ந்து மாலை 3:15 மணிக்கு திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், நெடுஞ்செழி யன், கட்சி நிர்வாகிகள் சாமிதுரை,எத்திராஜ், முகமதுஅலி, மலையரசன், கணேசன், அண்ணாதுரை, இளங்கோவன், பெருமாள், தாமோதரன், அமுதா தட்சணாமூர்த்தி, நாராயணசாமி, தர்மராஜன் உள்ளிட்ட விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.