திருப்புத்தூர் வேலாயுதசுவாமி கோவிலில் ஆக.,21ல் கும்பாபிஷேகம்
ADDED :3724 days ago
திருப்புத்தூர்: தென்மாப்பட்டு வேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஆக.21ல் நடைபெறுகிறது.தென்மாப்பட்டில் பழமை வாய்ந்த சோழிய வெள்ளாளர் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட மடம் உள்ளது.அங்கு வள்ளி-தெய்வானை உடனாய வேலாயுதசுவாமி எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் தற்போது திருப்பணி நடந்துள்ளது. கும்பாபிஷேகம் ஆக.,21ல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு யாகசாலை பூஜைஆக.,19ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து ஆக.,20 மற்றும் 21ம் நாட்களில் பூஜைகள் நடந்து 21ம் தேதி காலை 9.20 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பிற்பகல் 12.10 மணிக்கு மகா அபிஷேகம், அன்னதானம் நடைபெறும்.