உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஷ்ணு துர்க்கை கோயிலில் ஆக.,7ல் ஆடிப்பூர விழா

விஷ்ணு துர்க்கை கோயிலில் ஆக.,7ல் ஆடிப்பூர விழா

சிவகங்கை:சிவகங்கை பிள்ளைவயல் ஆர்ச் அருகேயுள்ள ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில், ஆக.,7ல் காப்புக்கட்டுடன் ஆடிப்பூர உற்சவ விழா துவங்குகிறது. தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை திருசதி அர்ச்சனை, லட்சார்ச்சனை, துர்க்கா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். மாணவர்களின் கல்வி சிறக்க ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 6 மணிக்கு, சிறப்பு கல்வி யாகம் நடத்தப்படும். 16 அன்று காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை பால்குடம், பறவை காவடி நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வருவார். ஆகஸ்ட் 15ம் தேதி மகா சண்டிமகாயாகம் துவங்கி, ஆகஸ்ட் 16ம் தேதி இரவு யாகம் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் எஸ்.சிவமணி சிவாச்சாரியார் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !