உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கண்ண மங்கை பெருமாளுக்கு ஜேஷ்டா அபிஷேகம்!

திருக்கண்ண மங்கை பெருமாளுக்கு ஜேஷ்டா அபிஷேகம்!

திருவாரூர்: திருவாரூர் அருகே திருக்கண்ண மங்தை பக்தவசலப்பெருமாள் கோவில் நேற்று பெரிய பெருமாளுக்கு தங்க கருடசேவை வீதியுலா காட்சி நடந்தது. திருவாரூர் மாவட்டம், திருக்கண்ண மங்கை பக்தவச்சலபெருமாள் 108 திவ்ய சேதங்களில் 27 இடத்தில் உள்ளது. இக்கோவிலில் பெருமாளுக்குரிய அனை த்து நிகழ்ச்சிகளும் வெகு விமர்சியாக நடந்து வருகிறது. நேற்று காலை 11.00 மணியில் இருந்து மாலை 5.00 மணி வரை  ஜேஷ்டா அபிஷேகம் என்கிற திருமஞ்சனம் வெகு விமர்சியாக நடந்தது. இதில் நல்லெ ண்ணைய், திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை சாறு, நார்த்தம் சாறு, சந்தனம் மற்றும் பன்னீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்து.  அதன் பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 11. 00 மணிக்கு தங்க கருட சேவையில் வீதியுலா காட்சி நடந்து. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !