நீங்கள் பகலில் தூங்குபவரா? இனி பயம் வேண்டாம்!
ADDED :3802 days ago
பணியில் இருக்கும் போதே தூக்கம் வருகிறதா! எப்போதும் அசதியாக இருக்கிறதா! இந்தப் பாடலைப் பாடினால் புத்துணர்வு ஏற்படும். அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே நியர்வளை முன்கையாள் நேரிழை அவளொடும் கயல் வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்பெயர்பல துதிசெய பெருந்தகை இருந்ததேபொருள்: நெஞ்சமே! மனச்சோர்வு, உடல்சோர்வு இருக்கிறது என்ற எண்ணத்தை அடியோடு ஒழித்து விடுவாயாக. மக்களிடமுள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றையும் போக்குவதும், மீன்கள் விளையாடும் வயல்கள் சூழ்ந்ததும், வளம் நிறைந்ததும், விதவிதமான வளையல்களை அணிந்த அழகுடைய உமையவள் அருள்பாலிப்பதும், பல பெயர்களை உடையதும், பிரம்மபுரீஸ்வரர் என்னும் பெயர் கொண்ட சிவன் குடியிருப்பதுமான சீர்காழியைச் சிந்திப்பாயாக.