காவிரிக்கரையில் திருவிழா!
ADDED :4122 days ago
காவிரிக்கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு திருவிழா மிக விமரிசையாக நடக்கும். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் இவ்விழா மிகவும் பிரசித்தம். மக்கள் ஆற்றுக்கு சென்று புனிதநீராடி பாவங்களைத் தொலைப்பர். காவிரியாறு தெய்வீக பலம் மிக்கது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் திருமேனியைச் சுற்றி வரும் புண்ணியம் பெற்றது. அகத்தியர் என்னும் பெருந்தகையால் உருவாக்கப்பட்டது இந்த ஆறு. காகவடிவில் வந்த விநாயகரின் திருவடி ஸ்பரிசம் பெற்றது. இத்தகைய புண்ணிய நதியில் மஞ்சள் தேய்த்து, மாங்கல்யம் மாற்றி நீராடி வருவது மங்கலமான வாழ்வைத் தரும். புதுமணத்தம்பதிகள் நீண்டகாலம் ஒற்றுமையாக வாழ இந்த விழா வழிவகுக்கிறது. பெண்கள் மாங்கல்ய பலத்துக்காகவும், விவசாயிகள் தங்கள் விளைநிலங்கள் பெருஞ்செழிப்பைத் தர வேண்டும் எனவும் காவிரியை வேண்டும் நன்னாள் இது.