திருப்பூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு யாகம்
ADDED :3727 days ago
திருப்பூர் :திருப்பூர் ஐயப்பன் கோவிலில், ஸ்ரீமத் பாகவத மகா உற்சவத்தில், நேற்று சிறப்பு யாகம் நடந்தது.ஸ்ரீஐயப்ப பக்த ஜன சங்கம், ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட் சார்பில், திருப்பூர் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில், ஸ்ரீமத் பாகவத மகா புராண சொற்பொழிவு, சங்கல்பம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.நிறைவு நாளான நேற்று, முன்னோர்களின் சாபம் நீங்க, பித்ருக்கள் சாம விமோசனம், சுபகாரியங்கள் தடை நீக்குதல், மக்கள் நலன், தொழில் வளம் பெருக, சிறப்பு யாகம் நடந்தது. பால் சாதம், பழங்கள், பட்டாடை மற்றும் பல்வேறு மூலிகை பொருட்களால் யாகம் மற்றும் நிறை வேள்வி நடைபெற்றது. பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.