உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய முத்துமாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம்!

பெரிய முத்துமாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம்!

திண்டிவனம்: திண்டிவனம் பெரிய முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி கூழ்வார்த்தல் பிரம்மோற்சவம் துவங்கியது. திண்டிவனம் எம்.ஆர்.எஸ்.,  ரயில்வே கேட் அருகில் பெரிய முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, கூழ்வார்த்தல் பிரம்÷ மாற்சவம், கடந்த 17ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, விநாயகர் பூஜையும், கொடியேற்றமும் நடந்தது. 6:30 மணிக்கு, கலச ஸ்தாபனமும்,  ரக்ஷாபந்தனமும், 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு, அம்மன் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு  அம்மனுக்கு கூழ் வார்த்தலும் நடந்தது. இரவு 8:30 மணிக்கு அம்மன் முத்து பல்லக்கில் வீதியுலா நடந்தது. ஆடி இரண்டாம் வெள்ளியன்று அம்மன்  சந்தன காப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.  மூன்றாம் வெள்ளி (31ம் தேதி), நான்காம் வெள்ளி (ஆக., 7) அம்மன் முத்துபல்லக்கில்  வீதியுலாவும் நடக்கிறது. ஐந்தாம் வெள்ளியான 14ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்  நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !