பாண்டுரங்கசாமி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3729 days ago
ஓசூர்:ஓசூரில், பாண்டுரங்கசாமி கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. ஓசூர், பழைய கிருஷ்ணகிரி சாலையில் பாண்டுரங்கசாமி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இதைத்தொடர்ந்து கணபதி பூஜை, ஹோமங்கள் நடத்தப்பட்டது. மாலையில் பஜனை நிகழ்ச்சியும், இரவு மஹா மங்களாரத்தி நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று பல்லக்கு ஊர்வலம், அன்னதானம் நடந்தது. தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் உள்ள பாண்டுரங்கசாமி கோவிலில் அஷ்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள், அபிஷேக ஆராதனை நடந்தது. மேலும் பாண்டுரங்க ஸ்வாமிக்கு மஹா மங்களாரத்தி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.