உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஊத்தங்கரை : ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 31ம் தேதி நடக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி பகுதியில் புகழ்பெற்ற பட்டாளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வரும், 31ம் தேதி காலை, 7.30 மணிக்கு நடக்கிறது. விழாவை முன்னிட்டு, 30ம் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, யாக பூஜை மற்றும், இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. 31ம் தேதி, மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது.இதையொட்டி ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !