புதுச்சேரி எல்லையம்மன் கோவில் தேரோட்டம்!
ADDED :3896 days ago
புதுச்சேரி: எல்லையம்மன் கோவில் தேரோட்டம் நேற்றுநடந்தது.புதுச்சேரி எல்லையம்மன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.ஒன்பதாம் நாளான நேற்று ரதோற்சவம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் தேரினை பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இழுத்தனர்.2ம் தேதி மதியம் 11:30 மணிக்கு கூழ்வார்த்தல், இரவு 7 மணிக்கு கும்பம் படைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை எல்லையம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.