ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு ஊர்வலம்
ADDED :3767 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆடி முளைக்கொட்டு விழாவினை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் தெரு, மாயாண்டிபட்டி உட்பட 5 தெருக்களில் ஆடிமுளைக்கொட்டு விழா கடந்த வாரம் துவங்கியது. தினமும் பெண்கள் அம்மன் பாடல்கள் பாடியும், இளைஞர்கள் கோலாட்டம் விளையாடி வந்தனர். நேற்று அனைத்து தெருக்களில் இருந்தும் முளைப்பாரிகள், பெரியமாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து, அம்மனை வணங்கினர். அங்கிருந்து பட்டதரசியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.