இரும்பை கோவிலில் நவாவரண பூஜை!
ADDED :3767 days ago
புதுச்சேரி: இரும்பை அருகில் உள்ள ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு நவாவரண பூஜை இன்று மாலை நடக்கிறது. இன்று காலை 10 மணிக்கு மூலவர் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீர் ஆகிய மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு விசேஷ தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் படுகிறது.பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீபாலா திருபுரசுந்தரி அம்மனுக்கு மாலை 7 மணிக்கு நவாவரண பூஜை நடக்கிறது. அம்மன் அலங்கரிக்கப் பட்டு தீபாராதனை நடக்கிறது. பின்னர் ஊஞ்சல் உற்சவம், நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீபாலதிருபுரசுந்தரி ஆலய ஸ்தாபகர் மற்றும் டிரஸ்ட் கணேஷ் சிவாச்சாரியார் செய்துள்ளனர்.