உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படைவீட்டம்மன் கோவிலில் நாளை செடல் உற்சவம்!

படைவீட்டம்மன் கோவிலில் நாளை செடல் உற்சவம்!

பண்ருட்டி: பண்ருட்டி லிங்காரெட்டிப்பாளையம் படைவீட்டம்மன் கோவிலில் பிரம்மோற்சவ செடல் உற்சவம் நாளை (31ம் தேதி) நடக்கிறது.  விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, 23ம் தேதி காலை கொடியேற்றம் நடந்தது. 24ம் தேதி காலை பல்லக்கிலும்,  மாலை சிங்க வாகனத்திலும் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று (29ம் தேதி) காலை பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், மாலை ரிஷப  வாகனத்திலும் வீதியுலா நடந்தது. இன்று குதிரை வாகனத்தில் வீதியுலாவும்,  நாளை (31ம் தேதி) செடல் உற்சவமும் நடக்கிறது. செடல்  உற்சவத்தையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, மதியம் 1:00 மணிக்கு செடல் உற்சவம், மதியம் 1:30 மணிக்கு அம்மன்   சிறப்பு அலங்காரத்தில் திருத்தேர் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து, 1ம் தேதி மஞ்சள் நீர் நிகழ்ச்சியும், 2ம் தேதி மாலை பல்லக்கில் அம்மன்  வீதியுலாவும், 3ம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !