குச்சனுாரில் சனீஸ்வரர், நீலாதேவி திருக்கல்யாணம்!
ADDED :3763 days ago
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுாரில் சனீஸ்வரர், நீலாதேவி திருக்கல்யாணம் நடந்தது.குச்சனுார் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத்திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்வான சனீஸ்வரர், நீலாதேவி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. சிறப்பு பூஜைகளுடன் உற்சவர் மணமேடை ஏறினார். கும்பத்தை நீலாதேவியாக பாவித்து தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால்முத்து மந்திர வேதம் முழுங்க தாலி கட்டினார். பெண் பக்தர்களுக்கு பூஜை செய்யப்பட்ட திருமஞ்சனம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் செய்திருந்தார். பேரூராட்சி நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன், உதவி அர்ச்சகர்கள் சிவக்குமார், கோபிநாத் மற்றும் பலர் பங்கேற்றனர்.