குருபவுர்ணமி: சாய்பாபா மகாசமாதி திறப்பு
ADDED :5296 days ago
புட்டபர்த்தி : குருபவுர்ணமியை முன்னிட்டு பகவான் சத்யசாய்பாபாவின் மகாசமாதி பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. பகவான் புட்டபர்த்தி சாய்பாபா கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஸித்தியடைந்தார். அவர் ஸித்தியடைந்த இடத்தில் மகாசமாதி கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரு பவுர்ணமியை முன்னிட்டு பகவான் சத்யசாய்பாபாவின் மகாசமாதி பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. இதனையடுத்து ஆயிரகணக்கான பக்தர்கள் மகாசமாதி அமைந்துள்ள பிரசந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் அரங்கில் குவிந்தனர். ஆந்திர அமைச்சர்கள் கே ரகுவீர ரெட்டி, ஜே கீதா ரெட்டி மற்றும் விஷ்வ இந்து பரிஷிதின் மூத்த தலைவர் அசோக் சிங்கால் ஆகியோரும் மகாசமாதியை தரிசனம் செய்தனர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.