விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் வருடாபிஷேகம்!
ADDED :3762 days ago
திருநகர்: திருநகர் அருகே விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.இதையொட்டி சுப்ரபாதம், ராம சதாச்சரி ஹோமம், நவ கலச ஸ்தாபனம், திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. இரவு பூ பந்தல் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் சிவராமன், மரகதவல்லி செய்தனர்.