கடலூர் பிரத்யங்கிரா கோவிலில் சாகை வார்த்தல்!
ADDED :3762 days ago
கடலூர்: தட்டாம்பாளையம் பிரத்யங்கிரா கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு எல்லையில் உள்ள தட்டாம்பாளையம் பிரத்யங்கிரா ,கருமாரி,ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் நேற்று சாகை வார்த்தல் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு கலச பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக, ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி ஹோமம் நடந்தது. தொடர்ந்து பூங்கரகம், அக்னி கரகம் ஊர்வலம் நடந்தது. மதியம் சாகை வார்த்தல் நடந்தது. மாலை ஊரணி பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.