காரைக்கால் சித்திகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3760 days ago
காரைக்கால் :காரைக்காலில் சித்திகாளியம்மன் கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. காரைக்கால் திருநள்ளார் சாலையில் பச்சூர் நூலாற்றங்கரை தெருவில் உள்ள சித்திகாளியம்மன் கோவில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது.முன்னதாக சித்திகாளியம்மனுக்கு சந்தனம்,பால்,தயிர் உள்ளிட்ட திரவங்களால் அபிஷேகம் சிறப்பாக நடந்தது.பின் தீபாரனை நடைபெற்றது. சித்திகாளியம்மன் கோவில் நடந்தது திருவிளக்கு பூஜையில் 100க்கு மேற்பட்ட பெண்கள் குடும்பம் நன்மை அடையவேண்டும்.திருமண நடைபெற்றமால் உள்ள பெண்களுக்கு திருமணம் ஆகவேண்டும். உடல்நலம் நன்மை அமையவேண்டும் என்று காளியம்மனிடம் வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர்.கிராமமக்கள் சிறப்பாக செய்திருந்தன்.