உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா

திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா

புதுச்சேரி: எல்லப்பிள்ளைச்சாவடி, திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி விழா நடந்தது. விழா, கடந்த 20ம் தேதி துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், வீதியுலா நடந்து வந்தது. 27ம் தேதி அரக்கு மாளிகை விழா நடந்தது.நேற்று மாலை 5:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (1ம் ம் தேதி) மாலை 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !