உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒசூரம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்

ஒசூரம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்

அச்சிறுபாக்கம்:இரும்புலி கிராமத்தில், நேற்று, ஒசூரம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.அச்சிறுபாக்கம் அருகே, இரும்புலி கிராமத்தில் ஒசூரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 6ம் ஆண்டு, பால்குட விழா மற்றும் விளக்கு பூஜையையொட்டி, காலை யில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் காலை 8:00 மணிக்கு, விநாயகர் கோவிலில் இருந்து, பால்குட ஊர்வலத்தை, ஊராட்சி தலைவர் ஜெயராமன் துவக்கி வைத்தார். முக்கிய தெருக்கள் வழியாக சென்ற ஊர்வலம், ஒசூரம்மன் கோவில் அருகில் முடிவடைந்தது. காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !