மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
உத்திரமேரூர்: அரசாணிமங்கலம், முத்து மாரியம்மன் கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேக விழா நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசாணிமங்கலம் கிராமத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. ரூ.௧௦ லட்சம் செலவில்... இக்கோவில், சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி பழுதடைந்திருந்ததை அடுத்து, இக்கோவிலை சீரமைக்க, அப்பகுதிவாசிகள் சார்பில் தீர்மானிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு ஆண்டுகளாக கோவில் சீரமைப்பு பணி நடந்து வந்தது. தற்போது பணி முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த 27ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, கோ பூஜை, குருபூஜை, சக்தி பூஜைகள் முடிந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு பூஜைகள்: அதை தொடர்நது, 29ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, கரிகோலமும், கோபுர கலச ஸ்தாபதம் ஆகிய நிகழ்ச்சிகளும், 31ம் தேதி, முதற்கால கலச விளக்கு வேள்வி பூஜையும், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால கலச விளக்கு வேள்வி பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால கலச விளக்கு வேள்வி பூஜையை தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு மகா கும்பாபி÷ ஷகம் நடந்தது. இதில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிறுவன தலைவர் அன்பழகன் கலந்து கொண்டு, விசேஷ பூஜைகள் நடத்தி கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றினார். விழாவில், உத்திரமேரூர் மற்றும் அப்பகுதியை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.