உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் பாடமுறைகள், பயிற்சிகள் தொடக்கம்!

விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் பாடமுறைகள், பயிற்சிகள் தொடக்கம்!

சென்னை: ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் ஓர் அங்கமான விவேகானந்தர் பண்பாட்டு மையம், சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. இந்த மையம் தனது பல்முனைச் செயல்திட்டங்களால் பங்கேற்கும் மாணவர்களிடையே வாழ்வியல் மதிப்பீடுகளை அறிதல், ஆரோக்கியமான, முழுமையான கலாச்சாரத் தரத்தில் சிறந்த வாழ்க்கை வாழ்தல் ஆகியவற்றிற்கான பயிற்சிகளை அளிக்கும் மனிதவள மேம்பாட்டுக் கழகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் கலாச்சார மதிப்பீடுகளையும், தொழில்நுட்பத் திறமைகளையும் பங்கேற்பவர்களிடம் வளர்ப்பதற்கான பல பாட முறைகள் ஃ பயிற்சிகள் ஆகியவற்றைத் தொடங்கியுள்ளது. மேலும் பல பயிற்சிகளையும் தொடங்க உள்ளது. இந்த மையத்தின் முக்கிய நோக்கமான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக சில ‘பணி மையமான பயிற்சிகளைப்’ குறைந்த கட்டணத்தில் ஆரம்பித்துள்ளது. மையத்திற்கு அருகே உள்ள குப்பங்களில் வசிக்கும் பள்ளிச் சிறுவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு (டியூஷன் சென்டர்) ஒன்றையும் இந்த மையம் இலவசமாக நடத்தி வருகிறது. கிராபிக் டிசைனிங், இமேஜ் எடிட்டிங், யோகா பயிற்சி, தஞ்சாவூர் ஓவியக்கலை, தியான வழிகாட்டுதல் என்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயிற்சிகள் மற்றும் இனி தொடங்கவிருக்கும் பயிற்சிகள் பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என சுவாமி விமூர்த்தானந்தர் கூறிபிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு: 9941855565, 9677149940


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !