மகாவராகி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம்!
ADDED :3729 days ago
கீழக்கரை: உத்தரகோசமங்கை வராகி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. சுயம்புவாக அவதரித்த மகாவராகி அம்மன் கோயிலில் ஆடி மாதம் கிருஷ்ணபஞ்சமியை முன்னிட்டு காலை 11 மணிக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. திருமண தடை அகலவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும் வேண்டி மாலை 5 மணியளவில் உற்சவருக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அம்மனுக்கு வளையல்கள் பூட்டப்பட்டன. பூஜைகளை மங்களப்பட்டர் செய்தார். அன்னதானம் நடந்தது. தேவஸ்தான திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர் உடனிருந்தனர்.