நகரசிவன் கோயிலில் ஆனி உத்திர தரிசனம்
ADDED :5282 days ago
சிவகங்கை : மதகுபட்டி அருகே சொக்கலிங்கபுரம் நகரசிவன்கோயிலில் ஆனி உத்திர தரிசனம் நடந்தது. நடராஜர் - சிவகாமசுந்தரி அம்பாளுக்கு பால், தயிர், நெய், பன்னீர், இளநீர் உட்பட 12 வகையான அபிஷேகம் நடந்தது. அறங்காவலர் வைத்தியநாதன் தலைமை வகித்தார். உபயதாரர் பத்மநாபன், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். காரியதாரர் ராமநாதன் வரவேற்றார். கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை நிறுவன தலைவர் தளவாய்நாராயணசாமி, சிவபுராண பாராயணத்தை துவக்கி வைத்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ராமநாதன், தெய்வானை, லீலாவதி, சீதாலட்சுமி, சீனிவாசன் பங்கேற்றனர். சிவா குருக்கள் தலைமையில் அபிஷேக ஆராதனை நடந்தது. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.