முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இரவில் பிரசாதம்
ADDED :3815 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வாணியக்குடி முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா கடந்த ஆக.,4 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.அன்று முதல் தினமும் இரவில் பெண்களின் கும்மியாட்டமும், ஆண்களின் ஒயிலாட்டமும் நடந்து வருகின்றன. கோயில் பிரசாதமாக பெரிய அண்டாக்களில் தயாரிக்கப்பட்ட பாயாசம் தினமும் இரவு 12 மணிக்கு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வரும் ஆக.,11ல் திருவிழா நிறைவடைகிறது.