கருணைமிகு கருப்பர்
ADDED :3779 days ago
அருளான எண்ணங்களைத் தேக்கி - பக்தி
அன்பரையே கருப்பண்ணர் ஊக்கி - நிதி
பொருளீந்து வாழ்வில் நலம்
பெறும்படி செய்துவிடும்
சாமி - கருப்பண்ண
சாமி!
பெருநிதி நல்வளங்கள் தந்து - அன்புப்
பக்தருடன் வாழ்வில் வலம்வந்து - ஆற்றல்
கருப்பர் செய்யும் மாயையினை
கண்டறிந்த பேர்கள் ஒளி
பெற்றார் - ஞானம்
கற்றார்!
செட்டிநாட்டில் வந்துதித்த சாமி - ஈயும்
செட்டியாரை மேலுயர்த்தும் சாமி - வாழ்வில்
அட்டியின்றி அன்பர்வரம்
அள்ளிநிதம் தருகின்ற
சாமி - கருப்பண்ண
சாமி!
தட்டாமல் தந்துதவி செய்து - கருப்பர்
தானாக நலங்களை நெய்து - மன
இட்டமுடன் வேண்டுவோரின்
இன்னல்களை சட்டெனவே
நீப்பார் - சுகம்
சேர்ப்பார்!
திருப்புத்தூர் கோட்டையிலே நின்று - கருப்பர்
தீவினையை நீக்கிடுவார் நன்று - பக்தர்
விரும்புகின்ற வேண்டுதலை
விருப்பமுடன் வாரித்தரும்
சாமி - கருப்பண்ண
சாமி!