உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் கோவிலில் பால் குட அபிஷேகம்!

தீவனூர் கோவிலில் பால் குட அபிஷேகம்!

திண்டிவனம்: மழை வேண்டி, தீவனூர் மாரியம்மன் கோவிலில் பால் குட அபிஷேகம் நடந்தது.திண்டிவனம் அடுத்த தீவனூரில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மழை வேண்டி, இக்கோவிலில் பால் குட அபிஷேகம் நடந்தது.

முன்னதாக தீவனூர் விநாயகர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின், மாரியம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை தீவனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவில் தர்மகத்தா முனுசாமி மற்றும் அப்பகுதி இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !