உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி கருமாரியம்மன் கோவிலில் பாலபிஷேகம்!

கள்ளக்குறிச்சி கருமாரியம்மன் கோவிலில் பாலபிஷேகம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சித்தேரி கரை புத்து கருமாரியம்மன் கோவில் 17ம் ஆண்டு பால் அபிஷேக விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி கரியப்பா நகர் சித்தேரி கரை புத்து கருமாரியம்மன் கோவிலில் பால்அபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து சக்தி அழைத்தல் துவங்கியது. பக்தர்கள் பலர் பால்குடம் ஏந்தி கடை வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து கருமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !