சித்தணி கிராமத்தில் புதன் உற்சவம்!
ADDED :3748 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த சித்தணி ஸ்ரீஅய்யனாரப்பன் கோவிலில் மூன்றாம் புதன்
உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி அய்யனாரப்பன், பூரணி, பொற் கலை, வீரபத்திர சாமி ஆகிய
சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. புதுச்சேரி, கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு, வழிபாடு செய்தனர்.விக்கிரவாண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.