விநாயகபுரத்தில் சண்டி யாகம்!
ADDED :3748 days ago
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த விநாயகபுரம் காளியம்மனுக்கு சண்டி யாகம்
நடந்தது. சின்னசேலம் அடுத்த விநாயகபுரம் காளியம்மனுக்கு நேற்று முன்தினம் அதிகாலை
கணபதி யாக பூஜை, பூர்ணாஹூதி, காப்பு கட்டுதல் மகா தீபாராதனை நடந்தது. நேற்று
அய்யனாருக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இன்று, காளியம்மனுக்கு சண்டியாக முதல் கால பூஜையும், நாளை அதிகாலை 5:00 மணிக்கு வேத பாராயணம், இரண்டாம் கால பூஜை, சப்த கன்னி, வடுக பூஜை மற்றும் சண்டியாகமும் நடக்கிறது.