கெங்கையம்மன் கோவிலில் ஆடிமாத பால்குட ஊர்வலம்!
ADDED :3748 days ago
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி கெங்கையம்மன் கோவிலில் ஆடிமாத பால்குட ஊர்வலம்
நடந்தது.
ரிஷவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கெங்கையம்மன் கோவிலில் ஆடி மாத பால்குட
ஊர்வலம் நடந்தது. முன்னதாக தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. பால்குட ஊர்வலத்தையொட்டி மூலவர் மற்றும் உற்சவர் விநாயகர்,
மாரியம்மன், கெங்கையம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா
தீபாராதனை நடந்தது. கடந்த 31ம் தேதி காலை 11:00 மணிக்கு சூளாங்குறிச்சி மணிமுக்தா
ஆற்றில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக
சென்று நேத்திக் கடன் செலுத்தினர்.