விருத்தாசலம் சத்யசாய் சேவா சமிதி சார்பில் திருவிளக்கு பூஜை!
ADDED :3749 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் சத்யசாய் சேவா சமிதி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. சாய் பாபா 90 வது அவதார திருநாள் மற்றும் ஆடி வெள்ளியையொட்டி, விருத்தாசலம் சத்ய சாய் சேவா சமிதியில் நேற்று முன்தினம் காலை சாய் பாபா திருஉருவப் படத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில், 90 பெண்கள், உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை செய்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றிவேல், மீனாட்சி மணி, கன்வீனர் குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.