உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலம் கொண்ட அம்மனுக்கு 108 குடம் பால் அபிஷேகம்!

கோலம் கொண்ட அம்மனுக்கு 108 குடம் பால் அபிஷேகம்!

திருவள்ளூர்:ஆடி மாதத்தை முன்னிட்டு, திருவள்ளூர் கோலம் கொண்ட அம்மன் கோவிலில், நேற்று 108 குடம் பால் அபிஷேகம் செய்யப்பட்டது.திருவள்ளூர், முகமதலி தெருவில் உள்ளது, இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட கோலம் கொண்ட அம்மன் கோவில். இங்கு ஆடி மாதம் நான்காம் வாரத்தை முன்னிட்டு, நேற்று, காலை 8:00 மணிக்கு, வேம்புலி அம்மன் கோவிலிலிருந்து, 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டது.தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு, கோலம் கொண்ட அம்மனுக்கு, 108 குடம் பால் அபிஷேகமும், மதியம் 12:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. பின்னர், மாலை 6:00 மணிக்கு, கோலம் கொண்ட அம்மனுக்கு, மஞ்சள் காப்பும், கோவில் வளாகத்தில் உள்ள விநாயகருக்கு விபூதி காப்பும், துர்க்கை அம்மனுக்கு குங்கும காப்பும், கருமாரியம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !