மாமல்லபுரம் திருநிலை கன்னியம்மன் ஆடி உற்சவம்!
ADDED :3749 days ago
மாமல்லபுரம்: திருநிலை கன்னியம்மன் கோவிலில், 9ம் ஆண்டு, ஆடி உற்சவ விழா நடந்தது. திருப்போரூர் அடுத்த திருநிலையில், கன்னியம்மன், கிராம தேவதையாக விளங்குகிறார். இங்கு அம்மன் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இக்கோவிலில், 9ம் ஆண்டு ஆடி உற்சவ விழா, கோலாகலமாக நடந்தது.உற்சவத்தை முன்னிட்டு, கடந்த, 5ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, அம்மனுக்கு காப்பு கட்டி, ஆடி உற்சவம் துவங்கியது. அதை தொடர்ந்து, 7ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், அலங்கரித்தும், பக்தர்கள், மஞ்சள் ஆடை அணிந்தும் தீமிதித்து வழிபட்டனர். இரவு, அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று பகலில், சிறப்பு வழிபாட்டுடன், பக்தர்கள் கூழ் வார்த்து வழிபட்டனர்.