உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர்-ராதை திருக்கல்யாண உற்சவம்

கிருஷ்ணர்-ராதை திருக்கல்யாண உற்சவம்

திருப்புவனம்: திருப்புவனத்தில் கிருஷ்ணர்-ராதை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருப்புவனம் ஸ்ரீசத்குரு நாம ஸங்கீர்த்தன பஜன் மண்டலி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடியில் கிருஷ்ணர்-ராதை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை திருமஞ்சனம், திருவாதாரனத்துடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணர் வீதியுலா நடை பெற்றது. நேற்று காலை அலங்கார கோலத்தில் கிருஷ்ணர்-ராதை- பாமா-ருக்மிணி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு கிருஷ்ணர்-ராதை சம்பவங்களை எடுத்து கூறும் வண்ணம் கோலாட்டம்,கும்மி நடந்தது. திருக் கல்யாண உற்சவத்தில் ஞானாநந்தர் சுவாமி, தியாகராஜ சுவாமி, ஸ்யாமா சாஸ்திரி, முத்துஸ்வாமி தீட்சிதர் பாடல்கள் பாடப்பட்டன. அலங்கரிக்கப் பட்ட கிருஷ்ணர்- ராதைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் திருக் கல்யாணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !