பூத வாகனத்தில் விருத்தாம்பிகை அம்மன் வீதியுலா!
ADDED :3708 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, தினமும் காலை சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் ஆழத்து விநாயகர், விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூத வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.