உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிப்பு!

வீரட்டானேஸ்வரர் கோவிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிப்பு!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆடி நான்காம் வெள்ளி உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு,   காலை 8:00 மணிக்கு  அம்பாள் சன்னதியில் விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், கலசபூஜை, பஞ்சாசன, பஞ்சஆவாரணபூஜை, மூலவர்
சிவானந்தவல்லிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு சிவானந்தவல்லிக்கு, சந்தனகாப்பு அலங்காரத்தில், சோடசோபவுபச்சார   தீபாராதனை நடந்தது. உற்சவமூர்த்தி அம்பாள், சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான   பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !