உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகா பரமேஸ்வரிக்கு திருக்கல்யாண வைபவம்!

ரேணுகா பரமேஸ்வரிக்கு திருக்கல்யாண வைபவம்!

விழுப்புரம்: ஆடி மாதத்தை யொட்டி பானாம்பட்டு காமராஜர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் திருக்கல்யாண வைபவம்   நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சந்தனகாப்பு   அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 11:00 மணிக்கு கரகம் வீதியுலா, பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைக்கும்   நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 4:30 மணிக்கு செடல் போடுதல், 5:00 மணிக்கு கும்பம் கொட்டுதல், இரவு 8:30 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி உடனுறை   ஜமதக்கிமுனிவர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுமங்கலி பூஜை, 10:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று மாலை   4:45 மணிக்கு மஞ்சள் நீராட்டு, தீர்த்த அபிஷேகம் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !