அச்சிறுபாக்கம் மாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா!
ADDED :3709 days ago
காஞ்சிபுரம்: அச்சிறுபாக்கம் அடுத்த தேன்பாக்கம், மதுரா அண்ணா நகர் கிராமத்தில், மாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, இன்று காலை, 11:00 மணியளவில், அம்மனுக்கு குங்கும அர்ச்சனையும், அதை தொடர்ந்து, அம்மன் கரகத்துடன் வீதியுலா நடைபெறும்.மாலை, 4:00 மணியளவில், அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்; 6:00 மணியளவில் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு 7:30 மணியளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் நடைபெறும்.