உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் துதி பாடல்களை மொழி பெயர்த்த முஸ்லிம் இளைஞர்!

அனுமன் துதி பாடல்களை மொழி பெயர்த்த முஸ்லிம் இளைஞர்!

லக்னோ: உ.பி.,யை சேர்ந்த முஸ்லிம் இளைஞர், அனுமன் சாலிசா எனப்படும், அனுமன் துதிப்பாடல்களை, உருதுவில் மொழிபெயர்த்துள்ளார். இந்து - முஸ்லிம் மத மோதல்கள் அதிகம் நடைபெறும் உத்தர பிரதேசத்தில், மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக, அபித் ஆல்வி என்ற இளைஞர், இந்தி மொழியில் உள்ள அனுமன் துதிப் பாடல்களை, உருதுவில் மொழிபெயர்த்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:மொழிபெயர்ப்பில் தவறு வந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய வேலையை, மிகுந்த கவனமாக மேற்கொண்டதால், மூன்று மாதங்கள் ஆயிற்று. சிவ பெருமானை போற்றி பாடும் பாடல்களையும், மொழிபெயர்த்து வருகிறேன். இந்துக்களும், முஸ்லிம்களும், தங்கள் மத வழிபாட்டு பாடல்களை பாடுகின்றனர்; ஆனால், அவற்றின் பொருள் தெரிந்து பாடுவதில்லை. சில வரிகளைப் படித்தாலும், பொருள் அறிந்து படிப்பதுடன், அதன் படி நடப்பதும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !