சைவ, வைஷ்ணவ படிமங்கள் ஆய்வு கூட்டம்
ADDED :3711 days ago
சிவகங்கை: சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் சைவ, வைஷ்ணவ படிமங்களின் ஆய்வு குறித்த கூட்டம் நடந்தது. சென்னை அரசு அருங்காட்சியக தொல்பொருளியல் பிரிவு (ஓய்வு) காப்பாட்சியர் ஆர்.பாலசுப்பிரமணியன், கி.பி., 6ம் நூற்றாண்டில் இருந்து சைவமும், வைணவமும் எவ்வாறு செழித்திருந்தது. இவை இரண்டும் தொல்லியல் சான்றாகவும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பற்றி விளக்கம் அளித்தார். கோவில்களில் சிற்பங்கள் கட்டட கலைக்கான சான்று குறித்து தெரிவித்தார். வரலாற்று துறை பேராசிரியர், மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள் பங்கேற்றனர். சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி ஏற்பாட்டை செய்திருந்தார்.