உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை பக்தர்களை பாதுகாக்க விபத்து மீட்புக்குழு

ஆடி அமாவாசை பக்தர்களை பாதுகாக்க விபத்து மீட்புக்குழு

தேனி: ஆடி அமாவாசைக்கு சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக, தேனி மாவட்டம் உப்புத்துறை மலைப்பகுதியில் விபத்து மீட்பு மற்றும் மருத்துவக் குழுவினர் 60 மணி நேரம் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை ஆடி அமாவாசை அன்று சதுரகிரி மகாலிங்கம் கோயில் திருவிழா நடக்கிறது. மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் மூன்று மலைப்பாதைகள் வழியாகவும் கோயிலுக்கு பக்தர்கள் செல்வர். ஆகஸ்ட் 13 வியாழன் அன்றே பக்தர்கள் கோயிலுக்கு புறப்பட்டு செல்வர். தேனி மாவட்டத்தில் வருஷநாடு மலைப்பகுதியில் உள்ள உப்புத்துறை வழியாக 14 கி.மீ., நடந்து சென்றால் கோயிலை அடையலாம். கடந்த ஆண்டு நடந்து சென்ற பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஏழு பேர் பலியாகினர். தற்போது பக்தர்கள் அதிகளவில் கூடும் விழா என்பதால், அசம்பாவிதம் நடந்துவிடாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் உப்புத்துறையில் இருந்து கோயில் வரை 14 கி.மீ., தூரம் போலீசார் ஆங்காங்கே நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 300 போலீசார், மற்றும் தீயணைப்பு விபத்து மீட்பு படையினர், மருத்துவக்குழுவினர் ஆகஸ்ட் 13 காலை முதல் 15 வரை தொடர்ந்து பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !