உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாணியக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா

வாணியக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா

ஆர்.எஸ்.மங்கலம்,:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வாணியக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா கடந்த ஆக.,4ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. முக்கிய விழாவான பூக்குழி விழா நேற்று இரவு நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் கண்மாய் கரை வீர விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்து கோயில் முன் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் நிறைவேற்றினர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மயிலூரணி, பாரனூர், பொன்னியேந்தல் முத்துமாரியம்மன் கோயில்களிலும் முளைப்பாரி விழாவை முன்னிட்டு நேற்று பூக்குழி விழா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !