உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிமுத்து மாரியம்மன் கோவிலில் 22ம் ஆண்டு தீர்த்தக்காவடி திருவிழா

கன்னிமுத்து மாரியம்மன் கோவிலில் 22ம் ஆண்டு தீர்த்தக்காவடி திருவிழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஸ்ரீகன்னிமுத்து மாரியம்மன் கோவிலில், 22ம் ஆண்டு தீர்த்தக்காவடி திருவிழா நாளை துவங்குகிறது. பொள்ளாச்சி, குமரன்நகர் முதலாவது லே- அவுட்டில் அமைந்துள்ளது ஸ்ரீகன்னிமுத்து மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலின், 22ம் ஆண்டு தீர்த்தக்காவடி திருவிழா நாளை துவங்குகிறது. நாளை காலை, 8:00 மணிக்கு இக்கோவிலில் இருந்து புறப்பட்டு, திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. தொடர்ந்து, பொள்ளாச்சி நேதாஜிரோடு விநாயகர் கோவிலில் இருந்து புறப்படும் தீர்த்தம், ஸ்ரீகன்னிமுத்து மாரியம்மன் கோவில் வந்தடைகிறது. வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு விநாயகருக்கும் ஸ்ரீகாசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கருப்பராயசாமி, ஸ்ரீநாககன்னி மற்றும் கன்னிமுத்து மாரியம்மனுக்கு தீர்த்தம் செலுத்தப்படுகிறது. அம்மனுக்கு பொங்கலிடுதல், மா விளக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மூன்றாம் நாளான சனிக்கிழமை அன்று மஞ்சள் நீராடலும், அன்று மாலை சக்திகும்பம் கங்கையில் கரைத்தலுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !