சுந்தரராஜருக்கு பவித்ர உற்சவம்
ADDED :3713 days ago
ஆர்.கே.பேட்டை:சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில், பவித்ர உற்சவம், நேற்று நிறைவடைந்தது. ஆர்.கே.பேட்டை, பிராமணர் வீதியில், சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், ஆடி பவித்ர உற்சவம், கடந்த, 11ம் தேதி, வாஸ்து பூஜைடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை திருமஞ்சனம், மாலையில் பவித்ர பிரதிஷ்டை நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு திருமஞ்சனமும், 9:00 மணிக்கு யாகசாலை திருவாராதனமும் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, வாணவேடிக்கையுடன் உற்சவர் உள் புறப்பாடு எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.