கூத்தாண்டவர் தேர்த்திருவிழா மண்டகபாடியில் கோலாகலம்
ADDED :3713 days ago
ரிஷிவந்தியம்: மண்டகபாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது.விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த மண்டகபாடியில் கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தேர்த்திருவிழா, கடந்த 4ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, 8 நாட்கள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.பின், திருநங்கைகள், தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் மதியம் 3:00 மணிக்கு, தேர்த் திருவிழா நடந்தது. இதில், 26 அடி உயரமுள்ள, கூத்தாண்டவர் சுவாமி தேரை, பக்தர்கள் வடம் பிடித்து, இழுத்து சென்றனர். இதைதொடர்ந்து, திருநங்கைகளின் தாலி அகற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.